ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை – ரயில்வே நிர்வாகம் விளக்கம்


சென்னையில் இருந்து புறப்படும், எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் முக்கிய நகரங்களில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Also Read  தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்..!

இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்படும், எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை என்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலையில் புறப்படும் சில ரயில்கள் மட்டும் தாமதமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதாகவும், பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் இவ்வாறு நிறுத்த படுவதாகவும் கூறப்படுகின்றது.

Also Read  தமிழ்நாடு: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

சென்னை – மங்களூரு விரைவு ரயில் இன்று மாலை 4.20க்கு பதில் 7.30 மணிக்கு புறப்படும் என்றும் இணை ரயில் தாமதத்தால் சென்னை – ஜெய்ப்பூர் விரைவு ரயிலும் மாலை 5.40 பதில் இரவு 8.30-க்கு புறப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

ஜி.கே. வாசனுக்கு முதல்வர் வாழ்த்து

Tamil Mint

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 13 திருநங்கையர் நியமனம்!

Tamil Mint

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

“சம்பாதிப்பது கோடி… கொடுப்பது லட்சம்..” – நடிகர் சூர்யாவை விமர்சித்த காயத்ரி ரகுராம்..!

Lekha Shree

தமிழகத்தில் இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

suma lekha

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi