திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை; மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்


திருமணத்திற்காக கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருக்கிறது” என குறிப்பிட்டார்.

Also Read  ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

மேலும், “1968 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இந்த சட்டம் இருக்கும். புதிய சட்டத்தின்படி, மதம் மாற்றுவதற்காக மட்டும் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது. மதம் மாற விரும்புவோர், முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். 

மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, விரைவில் கூட உள்ள சட்டசபை தொடரில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர் அமலுக்கு வரும். உத்தரபிரதேசத்தை  தொடர்ந்து,  மத்திய பிரதேச அரசு  இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது” என நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் - நெஞ்சு வலியால் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

Shanmugapriya

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

இந்தியா: தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.17 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்னு பாக்கனுமா? வெறும் ரூ.500 போதும்

suma lekha

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு – பாப் பாடகி ரிஹானாவை சாடிய கங்கனா ரணாவத்

Tamil Mint

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

”கேல் ரத்னா பெயர்மாற்றம்… வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” – மத்திய அரசுக்கு கண்டனம் தெரித்த எம்.பி.விஜய் வசந்த்..!

suma lekha