உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்…!


இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்…!

அதன் தொடர்ச்சியாக தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Also Read  கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வட தமிழகம் அருகே 11 ஆம் தேதி வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்! குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக் கடல் ,அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு இல்லை” – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Lekha Shree

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

Tamil Mint

கனமழையால் தலைமைச் செயலகத்தில் வேரோடு சாய்ந்த மரம்…! பெண் காவலர் பலி..!

Lekha Shree

கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

suma lekha

ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் – அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

sathya suganthi

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree

‘யாஸ்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பா?

Lekha Shree

ஆழ்கடலில் திருமணம்; அசத்திய தமிழகத்தை சேர்ந்த இளம் ஜோடி! – வீடியோ

Tamil Mint

சிறையில் சசிக்கு சிறப்பு வசதி.. கண்காணிப்பாளர் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் ஒழிப்பு படையினர்..!

suma lekha

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree