என்னா அடி…! காவலர் முன்னிலையில் டேக்சி ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்..! வைரல் வீடியோ இதோ..!


நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் டேக்சி ஓட்டுனரை சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல நெட்டிசன்கள் அப்பெண்ணை கைது செய்யவேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.

Also Read  "ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடு!!" - இஸ்லாமியரை மிரட்டிய இருவர் கைது..!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அவாத் கிராஸிங் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பெண்ணின் காரை அந்த ஓட்டுநர் இடித்துவிட்டதாக கூறி அப்பெண் அவரை சரமாரியாக 20 தடவைக்கும் மேல் அடிக்கிறார்.

இந்த வன்முறை செயல் பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அப்பெண்ணின் செய்கையை தடுக்க பலர் முற்பட்டபோது அப்பெண் அவர்களையும் தாக்குகிறார்.

Also Read  கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “என்னதான் கோவம் என்றாலும் இப்படியா ஒருவரை தாக்குவது?” என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை தடுக்க வந்த போலீசாரையும் மதிக்காமல் அப்பெண் அந்த ஓட்டுநரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இல்லை.

Also Read  யுவனின் குரலில் 'வென்று வா வீரர்களே'..! பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி #arrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

135 நாட்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வென்ற நபர்.

mani maran

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தை பற்றி தமிழில் ட்வீட் செய்துள்ளார்

Tamil Mint

ஒன்றல்ல…இரண்டு கின்னஸ் சாதனை புரிந்த இந்திய ராணுவ வீரர்…! என்ன சாதனை தெரியுமா…?

Devaraj

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

sathya suganthi

சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாக ட்ரெண்ட் ஆகும் #istandwithsachin ஹேஷ்டேக்!

Tamil Mint

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

“கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” – உயிரிழந்த கர்ப்பிணி டாக்டரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

Lekha Shree

பிசிசிஐ-யின் டி20 உலகக்கோப்பை குறித்த அறிவிப்பு..! ட்ரெண்டிங்கில் கவுதம் கம்பீர்..! காரணம் இதுதான்..!

Lekha Shree

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree