a

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், அவர்கள் தங்கும் வசதிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளதாக கூறினார்.

Also Read  பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

இதனையடுத்து பிரசித்தி பெற்ற உணவகங்கள் மூலம் தரமான உணவு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால், கொரோனா முதல் அலையின் போது செலவிடப்பட்ட தொகையை விட தற்போது ஒரு நாளைக்கு ரூ.30 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தடுப்பூசிகளின் கையிருப்பை சொல்லக்கூடாது என மத்திய அரசு கூறுகிறது என்றும் கையிருப்பு சொல்லவில்லை எனில் மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைவர் என்றும் கூறிய அமைச்சர், உண்மை நிலையை சொல்வது தான் உகந்தது என்றார்.

Also Read  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

தமிழகத்திற்கு இதுவரை ஒரு கோடியே ஒரு லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன என்றும் அதில், 97,62,957 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் தற்போதைக்கு சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஜூன் மாதத்தில் 37 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தருவதாக மத்திய அரசு கூறிய நிலையில், அதில், 6.5 லட்சம் தடுப்பூசிகள் 13 ஆம் தேதிக்குள் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர் என்றும் தடுப்பூசிகள் வந்ததும் அதனை மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

Also Read  தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை நோய் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்

Tamil Mint

திருவிழா காலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

மதுபாட்டிலில் கிடந்த பாம்பு; குடித்த மதுப்பிரியர் மயக்கம்

Devaraj

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

Bhuvaneshwari Velmurugan

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரின் மனைவி திருச்சியில் கைது

Tamil Mint

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

வாத்தி கம்மிங்…! அப்பாவு : ஆங்கில ஆசிரியர் டூ அவைத்தலைவரான கதை…!

sathya suganthi

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil