a

வைரமுத்து-சின்மயி விவகாரம் – மனம் திறந்த மதன் கார்க்கி..!


கவிஞர் வைரமுத்துக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் தனது தந்தையை நம்புவதாக அவரது மகனும் கவிஞருமான மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி உட்பட 17 பேர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர். அந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கேரளாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி விருது வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மலையாள நடிகை பார்வதி, பாடகி சின்மயி, கவிஞர் தாமரை உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால் அவருக்கு இந்த விருது வழங்கக் கூடாது என ஒரு தரப்பினரும் வைரமுத்துக்கு இந்த விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த பெருமை என ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Also Read  நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஓஎன்வி கலாசார மையம் அறிவித்ததை அடுத்து சர்ச்சைகள் காரணமாக விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வைரமுத்து அறிவித்தார்.

இந்நிலையில் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிலர் உங்கள் தந்தையையும் தாயையும் வெறுத்து அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் போது உங்கள் பெற்றோர் அதனை மறுக்கும் போது நீங்கள் யாரை நம்புவீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

மேலும், “நான் எனது தந்தையை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு, தங்கள் பக்கம் உண்மை உள்ளதாக குற்றம் சாட்டுபவர்கள் நம்பினால் அதை அவர்கள் சட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லட்டும் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வரும் வரை தெரியாது இழப்பின் கோரம்” – அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு!

Lekha Shree

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Lekha Shree

அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

Devaraj

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

நடிகை பார்வதி நாயரின் பிங்க் ஹாட் புகைப்படங்கள் இதோ…!

HariHara Suthan

நடிகை ஷகிலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அஸ்வினுடன் ஷகிலா மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

நடிகர் சோனு சூட்டிற்கு கிடைத்துள்ள வித்தியாசமான கவுரவம்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

‘கர்ணன்’ பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree