புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு…!


புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை விரட்டியபோது கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அதில், சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகியோர் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் விசைப்படகு மீது மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

Also Read  முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சேவியர், சுகந்தன் ஆகிய இரண்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அப்போது இலங்கை அரசின் கொலைவெறி செயலை கண்டித்தும் இறந்த மீனவர் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேவியர், சுகந்தன் உள்ளிட்ட இரண்டு மீனவர்களை தமிழகம் கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க கோரியும் இறந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மீனவரின் உறவினர்களும் போராட்டம் நடத்தினர்.

Also Read  கூட்டுறவு வங்கியின் தலைவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு: 21.2 கிலோ தங்கம் பறிமுதல்!

அதை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராஜ்கிரனது உடல் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், அவரது உடல் அவரது சொந்த ஊரான கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இலங்கை கடற்படை விரட்டியபோது கடலில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார்.

Also Read  "மக்கள் விரும்பினால் மாநிலங்களை பிரிக்கலாம்!" - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்

அந்த வழக்கில், இன்று ராஜ்கிரண் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..! எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு?

Lekha Shree

“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க..” ம.நீ.ம. நிர்வாகிகளிடம் கமல் ஆவேசம்

Ramya Tamil

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

நடிகர் விவேக், கி.ராவுக்கு சட்டமன்றத்தில் புகழாரம்…!

sathya suganthi

அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

Lekha Shree

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

நாளை கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Tamil Mint

எஸ்பிபி காலமானார்

Tamil Mint