பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமி… கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..!


பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனது 17 வயது மகள் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் அடைந்துள்ளார். அவரது 6 மாத கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

Also Read  கூடுதல் வரதட்சணை கேட்டதால் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்…! பண்ருட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரின் 17 வயது மகள் தினமும் மினி பேருந்தில் பயணம் செய்தபோது ஓட்டுநர் தங்கபாண்டியன் (44) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதில் சிறுமி கருவுற்று தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Also Read  விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

20 வாரங்களை தாண்டிய கருவாக இருப்பதால் அதை கலைக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி தேவை என்பதால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கருவை கலைப்பதால் சிறுமியின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மனுதாரரின் மகள் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்ஸோ வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் போலீசார் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Also Read  அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு - ஆலோசனை கமிட்டி உருவாக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் ஆணைய குழு இன்று சென்னை வருகை!

Tamil Mint

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

அமமுக-தேமுதிக கூட்டணி! – விஜயகாந்த் வென்ற தொகுதியில் களம் காணும் பிரேமலதா!

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது…!

Lekha Shree

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: மாணவர்களின் விபரங்களை வெளியிட்ட பள்ளி நிர்வாகம்..!

suma lekha

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..!

suma lekha

மருத்துவ கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு

Tamil Mint

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்!

suma lekha

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree