a

“என் பாட்டியின் PSBB பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!” – மதுவந்தி அதிரடி


சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வந்தது உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் அந்த பள்ளியின் டிரஸ்டிகளான ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ராஜகோபால் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர் என்றும் ஒரு தனிப்பட்ட நபர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள் என்றும் மதுவந்தி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

Also Read  உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

தன் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் PSBB என்றும் அவருடைய பெயரும் பள்ளியின் பெயரும் கெடக்கூடாது என்றும் தானும் தனது அப்பாவும் இதற்கு அனுமதிக்கவே மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தன் பாட்டியின் இந்தக் கல்வி பாரம்பரியம், கஷ்டப்பட்டு வளர்த்தப் பெயர் ஒரு நொடியில் கெட்டுப்போக விடமாட்டேன் என்றும் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ள மதுவந்தி, ஆசிரியர் குறித்த சர்ச்சை கிளம்பியவுடனே, இதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நேற்றிரவு 12 மணிக்கே தன் அப்பா பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…!

பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்கு தனது குடும்பம் எல்லா ஒத்துழைப்பும் கொடுப்போம் என்றும் ஆனால், இதில் சிலர் எங்கள் சாதியை இழுக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள மதுவந்தி, தன்னை பொறுத்தவரை தவறு செய்தவர் தனிப்பட்ட நபர் என்றும் அவர்மீது, சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு இன்னும் நிரூபணம் ஆகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர் என சாதி, மதத்தை கொண்டுவந்து அரசியல் பண்ணக் கூடாது என்றும் இதனை எக்காரணம் கொண்டும் தான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  அறிஞர் அண்ணாவின் நினைவு தினம்: ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

யார் தவறு பண்ணாலும் கேள்வி கேட்கும் குணத்தை தன் பாட்டி தனக்கு கொடுத்துள்ளார். அதனை இன்றுவரை ஃபாலோ செய்வதாகவும் மதுவந்தி தெரிவித்துள்ளார்.

சாதி, மதத்தை உள்ளே கொண்டு வந்து அரசியல் பேசும் கோமாளிகளை கேள்வி கேட்கத்தான் செய்வேன் என்றும் இந்தக் கோமாளிகள் அடக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

Lekha Shree

1 முதல் 8 வரை ஆல்பாஸ் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு…!

Lekha Shree

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

பாஜகவினர் தாக்குதல் நடத்திய கடையில் கமல்…! காலணி வாங்கி ஆதரவு…!

Devaraj

என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Tamil Mint

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

Tamil Mint

நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி

Tamil Mint

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi