வெள்ளக்காடான மகாராஷ்டிரா…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு..!


மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் பருவ மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை ஒரு வாரமாக புரட்டி போட்டு வருகிறது.

Also Read  கொரோனா விதிமுறை மீறல் - நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சதாரா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு குழு, கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

Also Read  மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்!

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராய்கட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடியும் மற்ற மாவட்டங்களுக்கு ரூ.50 லட்சமும் நிவாரண தொகையாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  "மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே" மோடிக்கு சவால் விட்ட மம்தா பானர்ஜி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

Tamil Mint

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

பாஜக தேசிய மகளிரணி தலைவர் ஆனார் வானதி சீனிவாசன், குஷ்புவுக்கும் விரைவில் புது பதவி

Tamil Mint

தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம்! காரணம் இதுதானா?

Lekha Shree

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

அடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெப் அறிவிப்பு

Tamil Mint

ககன்யான் திட்டத்தின் முதல் வெற்றி: 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இலக்கு.!

mani maran

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் -எல். முருகன்

Shanmugapriya

83 முறை ரத்த தானம் செய்த ஆந்திராவை சேர்ந்த நபர்!

Shanmugapriya

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” – ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா, சீனா.?

mani maran