a

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.16 லட்சமாக உள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு - ஆய்வில் தகவல்

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது மகாராஷ்டிரா அரசு. அதில், “மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. திருமணங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமண சடங்குகளை 2 மணி நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமாக ரூ.50,000 விதிக்கப்படும். அவசர அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

Also Read  ஆக்சிஜய் வாயு கசிவு - மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

புதிய வழிகாட்டுதல்களின்படி, உள்ளூர் ரயில்கள், மெட்ரோ மற்றும் மோனோரெயில் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள் (மாநில, மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள்) மற்றும் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ கிளினிக் ஊழியர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும்.

அரசாங்கத்தின் அடையாள அட்டைகளின் அடிப்படையில் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ அமைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு முறையே டிக்கெட் அல்லது பாஸ் வழங்கப்படும்.

Also Read  அதிகரிக்கும் கொரோனா - முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

நீண்ட தூர ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு கைகளில் முத்திரை குத்தப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கட்டாயமாக இரண்டு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கட்டுப்படிகள் இன்று இரவு 8 மணி முதல் மே 1ம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 568 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் 6.95 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

Lekha Shree

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

“ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!” – மாநில அரசு

Lekha Shree

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj

கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்த விராட் கோலி-அனுஷ்கா தம்பதி…!

Lekha Shree

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மருத்துவமனையில் அனுமதி!

Devaraj

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

காதலர் தினத்தையொட்டி வாட்ஸ் அப்பில் வலம் வரும் சூப்பர் ஆப்பர்…!

Tamil Mint