சூப்பர்ஸ்டார் ஜோடிகளுடன் நடிக்கும் ‘மங்காத்தா’ நடிகர் மஹத்…!


தமிழில் மங்காத்தா படத்தின் மூலம் மக்களுக்கு பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிகர் ஜாஹிர் இஃபாலுடன் இணைந்து இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா மற்றும் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி ஆகியோரும் நடிக்கின்றனர்.

Also Read  'குக் வித் கோமாளி' அஸ்வினின் 'அடிபொலி' பாடலை புகழ்ந்த மோகன்லால்…!

ஏற்கனவே லண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து மஹத் கூறுகையில், “பாலிவுட் பட தயாரிப்பில் உள்ள நண்பர் சுதீஷ் சென் என்னை பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்யச் சொன்னார்.

இப்படத்தின் ஆடிஷனில் பங்கேற்று தேர்வானேன். சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி போன்ற பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்களுடன் நடிக்க முதலில் தயக்கம் இருந்தது.

Also Read  "கவிஞனே நீ சமுத்திரம்!" - வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

ஆனால் இருவரும் என்னிடம் இயல்பாகப் பழகி, அதோடு படத்தில் சிறப்பாக நடிக்க நம்பிக்கை கொடுத்தனர். இன்னொரு சக நடிகரான ஜாஹிரை சகோதரராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

பாலிவுட்டில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. ஹிந்தி பேச மனைவி பிராச்சி உதவினார். பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படமாக இது இருக்கும்.

Also Read  ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை… யார் தெரியுமா?

நான் நினைத்தே பார்த்திராத ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி. லண்டனில் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

பிப்ரவரியில் ஓடிடியில் வெளியாகும் செல்வராகவன்- கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காயிதம்’?

Lekha Shree

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்.!

suma lekha

இரண்டு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம்!

Lekha Shree

நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

அஜித் Vs சூர்யா? ‘வலிமை’யுடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’?

Lekha Shree

பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

#29YearsofAARahman : இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்.

mani maran

பப்ஜி உடையில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree