a

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறை…!


காந்தியடிகளின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் மகள் இலா காந்தி.

மனித உரிமைகள் ஆர்வலரான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறார்.

சமூக செயற்பாட்டாளரான இவர் மீது மகராஜ் என்ற தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

அந்த புகாரில், சணல் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், அந்த ஆர்டருக்கான இறக்குமதி வரி செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்றும், இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி கடனாக வேண்டும் எனவும் வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும் ஆஷிஷ் லதா ராம்கோபின் தன்னிடம் கேட்டதாகவும் மகராஜ் தெரிவித்துள்ளார்.

Also Read  சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!

ஆனால் போலி இன்வாய்ஸ், மற்றும் சில ஆவணங்களை போலியாக உருவாக்கி மகாராஜிடம் ஆஷிஷ் லதா பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகாராஜ் கடந்த 2015ம் ஆண்டு டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .

அதன் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மூன்று கைத்தறி கன்டெய்னர்களை இறக்குமதி செய்வதாக பொய் தகவல் கூறி போலி இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை ஆஷிஷ் லதா வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  இங்கிலாந்து இளவரசராக நீண்ட காலம் வாழ்ந்த பிலிப் – அரிய புகைப்படங்களின் தொகுப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

“உலகின் அழுக்கான மனிதர்” – 67 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

Lekha Shree

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

அமெரிக்கா: அதிபர் டிரம்ப் கொரோனா நிவாரணத்திற்கு ஒப்புதல்

Tamil Mint

தொடர் ஏவுகணை தாக்குதல்.. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்…

Ramya Tamil

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…!உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா பெண்..!

sathya suganthi

குண்டு மழையால் தரைமட்டமான கட்டடங்கள் – 10 வயது சிறுமியின் நெஞ்சை உருக்கும் அழுகை…!

sathya suganthi

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

Tamil Mint

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya