a

VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலாலா… அவர் கடந்து வந்த பாதை ஓர் பார்வை..!


இங்கிலாந்தின் VOGUE அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளார் மலாலா. மேலும், தன்னுடைய கடந்த கால அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்துவந்த மலாலா அங்கு இருக்கும் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வந்தார்.

அவரின் குரலை நசுக்க நினைத்த தலீபான் தீவிரவாதிகள் மலாலாவை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை மீது இங்கிலாந்து அழைத்துச் சென்று உயர்தர சிகிச்சை அளித்தனர்.

இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு போராடி மீண்டு வந்த அவரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

அவர்களை பாராட்டி உலக அமைதிக்கான நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது. அவருக்கு அப்போது வயது 17. இதனால், உலகிலேயே மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்ற சிறுமி என்ற சிறப்பை பெற்றார்.

இங்கிலாந்தில் தங்கி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் உலக அளவில் பெண் குழந்தைகளுக்கு படிப்பு வழங்குவது குறித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Also Read  இந்தியாவில் உருமாறிய கொரோனா - பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

23 வயதாகும் மலாலாவின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக புகழ்பெற்ற VOGUE இதழ் அதன் அட்டைப்படத்தில் அவரை அலங்கரித்து அழகு பார்த்துள்ளது.

இந்த புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது Vogue இதழ்.

Also Read  சிவப்பு பட்டியலில் இந்தியா….!

அவர் கடந்து வந்த பாதை குறித்து மலாலா கூறுகையில், “எனக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்துக்குப் பிறகு என் ஒத்த வயதினர் உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்தேன்.புத்தகம் ஒன்றை வெளியிட்டேன்.

ஆவணப்படம் ஒன்றை எடுத்தேன். மேலும் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன். இறுதியாக பல்கலைக்கழகத்தில் எனக்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

என் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினேன். அங்கிருந்து ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழித்தேன்.

மெக்டொனால்டு உணவகத்துக்கு சென்றேன். போக்கர் கேம் விளையாடினேன். இதையெல்லாம் நான் முன்பு பார்த்ததில்லை. விளையாடியதும் இல்லை. எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்” என மலாலா தெரிவித்துள்ளார்.

Also Read  குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மலாலா, “இந்த கேள்வி எனக்குள்ளும் நாள்தோறும் எழுகிறது. தினமும் படுக்கையிலிருந்து எழும் போதெல்லாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என யோசிப்பேன்” என தெரிவித்தார்.

11 வயதில் பெண் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் தொடங்கியதாகவும் 13 ஆண்டுகள் கழித்தும் அதே நிலை தான் அங்கு நீட்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இன்று உலக புற்றுநோய் தினம்!

Tamil Mint

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இருதய நோய்? – வைரலாகும் உடல் மெலிந்த புகைப்படம்

sathya suganthi

‘வைரக் கற்கள்’ – வதந்தியை நம்பி ஏமாந்த மக்கள்…!

Lekha Shree

தூக்கத்தில் Earbud-ஐ விழுங்கிய நபர்! – அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு

Tamil Mint

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு

Tamil Mint

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj