தற்கொலை செய்து கொண்ட கணவர்.. மனம் தளராமல் காபி டே நிறுவனத்தை மீட்ட மனைவி..!


கிட்டத்தட்ட 7000 கோடி கடன் சுமையில் இருந்த காபி டே நிறுவனத்தை மீட்டு எடுத்து ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார் மாளவிகா ஹெக்டே.

Malavika Hegde appointed as the CEO of Cafe Coffee Day

இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான நிறுவனமாக திகழ்வது காபி டே நிறுவனம். இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் சித்தார்த்தா. கர்நாடகாவை சேர்ந்த இவர் மிகப் பிரபலமான தொழிலதிபர் ஆவார். சித்தார்த்தா 1993ம் ஆண்டு தான் இந்த காபி டே நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சர்வதேச சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்தது. மேலும், இந்த நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது.

அதோடு ஆசியாவிலேயே அரபிக்கா பீன்ஸ் வகை காபி உற்பத்தியில் சித்தார்த்தா நிறுவனம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது. இருந்தாலும் தொழில் போட்டியில் காபி டே நிறுவனம் தொடர் சரிவை சந்தித்து வந்தது. அதிலும் பங்குச் சந்தையில் கண்ட சரிவினால் காபி டே நிறுவனத்திற்கு அதிக கடன் சுமை ஆனது. இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அவருடைய குடும்பத்திற்கு பேரிடியாக இருந்தது. மேலும், சித்தார்த்தா பெரும் கடன் சுமையால் தத்தளித்து வந்ததாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

Also Read  ஆக்சிஜய் வாயு கசிவு - மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

அதோடு அவர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் தான் கடன் சுமை தாங்க முடியாமல் இருக்கிறேன் என்று எழுதி இருந்தார்.

இவர் இறந்த போது இந்த நிறுவனம் மீது சுமார் 7,000 கோடி ரூபாய் கடன் சுமை இருந்தது. இதனால் இந்த நிறுவனம் ஒருபோதும் மீள முடியாது என்று அந்த நிறுவன ஊழியர்கள் எல்லாம் கூறினார்கள். மேலும், இந்த கடையை இழுத்து மூட வேண்டியது தான் என்று பல பேர் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் காபி டே கடை இருக்க வேண்டும் என்பது தான் சித்தார்த்தாவின் ஆசை என்பதால், தன்னுடைய கணவரின் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருந்த மாளவிகா தனது கணவரின் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் காபி டே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

Also Read  பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா
I Am Resolutely Committed To The Future Of Coffee Day: Director Malavika  Hegde - SheThePeople TV

மேலும், மாளவிகா பொறுப்பேற்று வெறும் 2 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் மீது இருந்த கடன் சுமையை பாதியாக குறைத்து வெற்றிப் பாதைக்கு வழி வகுத்தார். இவரின் செயல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் பல பேருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது காபி டே நிறுவனத்தின் கடன் சுமை வெறும் 3100 கோடியாக இருக்கிறது.

மேலும், இந்த நிறுவனத்தை கடன் இல்லாமல் லாப பாதைக்கு திரும்புவதே தன்னுடைய லட்சியம் என்றும் சமீபத்தில் மாளவிகா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Also Read  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் சானியா மிர்சா..!

இப்படி கடன் சுமையால் தன் கணவர் தற்கொலை செய்தும் மனம் தளராமல் கடினமாக போராடி குறுகிய காலத்தில் நிறுவனத்தின் மேலிருந்த கடன் சுமையை பாதியாக குறித்த மாளவிகா பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை மிரட்டும் கொரோனா…அச்சுறுத்தும் ஒமிக்ரான்.. தற்போதைய நிலை என்ன?

suma lekha

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

சபரிமலையில் தினந்தோறும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி.!

suma lekha

டிஎன்பிஎஸ்ஸி போல் இராணுவத்திலும் ஊழலா….! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….

VIGNESH PERUMAL

கொரோனா 3ம் அலை தொடங்கியதா.? 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு .!

suma lekha

கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு…! ரசிகர்களின் கண்ணீரால் நிரம்பியுள்ள கண்டீரவா மைதானம்..!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சடலங்களை எரியூட்ட நடமாடும் தகன மேடை!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்…!

Lekha Shree

நாட்டில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு – கருத்தரங்கில் தகவல்

Devaraj