a

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகை மாளவிகா மோகனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் மூத்த மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜனுடன் காணொலி வழியாக உரையாடியுள்ளார்.

Also Read  அம்மா,அப்பாவுடன் நடிகை சாய் பல்லவி.. வைரலாகும் அழகிய குடும்பம்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி நடராஜன், 30 வருடங்கள் மருத்துவத்துறையில் அனுபவமுள்ளவர். இவர் கொரோனாவுக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் கொரோனா குறித்து எழும் சந்தேகங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், வைட்டமின் உணவுகள் ஆகியவை குறித்து மாளவிகா கேட்டறிந்தார்.

Also Read  "ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!" - நடிகர் தனுஷ் இரங்கல்

மேலும் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை மாளவிகா ஏற்படுத்தி உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு! யாருக்கு சாதகம்?

Lekha Shree

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

‘ஆஷிக் 2’ கதாநாயகியின் மாலத்தீவு விசிட் – வேற லெவல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Tamil Mint

மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

Tamil Mint

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

“மனம்திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – ஆ.ராசா.

Lekha Shree