“நதிகளில் சடலங்கள் மிதந்த மாநிலம் சிறந்த மாநிலமா?” – மம்தா பானர்ஜி


“உத்தரபிரதேசத்தில் நதிகளில் சடலங்கள் மிதந்து வந்தன. ஆனால் அந்த மாநிலத்தை சிறந்த மாநிலம் என பிரதமர் கூறுகிறார். அம்மாநிலத்தை சிறந்த மாநிலம் என கூறுவதில் பாஜகவுக்கு வெட்கமில்லை” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, “நாட்டு மக்களுக்கும் மேற்குவங்க மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

நாங்கள் பணம், விசாரணை அமைப்புகள், மாஃபியாக்களின் அதிகாரம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடினோம்.

அனைத்து தடைகளையும் தாண்டி மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டதால் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். நமது நாடு மற்றும் உலக நாட்டு மக்களின் ஆசிகளை பெற்றுள்ளோம்.

பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. எனது போனும் ஓட்டுக் கேட்கப்பட்டது. இதனால் சரத்பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை.

உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை. மத்திய அரசை அடக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை அழித்து விடுவார்கள்.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

கூட்டமைப்பை தரைமட்டமாக்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அமைச்சர்கள், நீதிபதிகள் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.

நீதித்துறை மட்டுமே நாட்டை காக்க முடியும். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

Also Read  பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் நதிகளில் சடலங்கள் மிதந்து வந்தன. ஆனால் அந்த மாநிலத்தை சிறந்த மாநிலம் என பிரதமர் கூறுகிறார். அம்மாநிலத்தை சிறந்த மாநிலம் என கூறுவதில் பாஜகவுக்கு வெட்கமில்லை.

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டு எதிர்க்கட்சிகள் துன்புறுத்தப்படுகின்றனர்” என பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lekha Shree

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

அடுத்தடுத்து டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் – ஜம்முவில் பதற்றம்

sathya suganthi

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

படிப்புக்காக உணவு டெலிவரி செய்யும் இளம்பெண்!

Shanmugapriya

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் கல்லூரி மாணவிகள்…!

sathya suganthi

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi