a

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!


யாஸ் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது.

வங்க கடலில் உருவான யாஸ் புயல் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் தம்ரா துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Also Read  மேலும் குறையப் போகும் வங்கிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சியில் ஊழியர்கள்

இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மேற்குவங்காளத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநில அரசு தரப்பில் பங்கேற்க வேண்டிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அரைமணி நேரம் காலதாமதமாக வந்தனர்.

அவர் அனைவரும் கூட்டம் நடைபெறும் அலுவலகத்திலேயே இருந்தபோதும் அந்த அறைக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

பின்னர் 15 நிமிடங்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்ற மம்தா தான் கொண்டுவந்த புயல் பாதிப்பு தொடர்பான தரவுகள் மற்றும் விவரங்களை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

அதன் பின்னர் வேறு சில கூட்டங்களில் பங்கேற்க வேண்டியதாக இருப்பதால் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுவதாக பிரதமர் மோடியிடம் கூறிய மம்தா பானர்ஜி கூட்டம் நடைபெறவிருந்த அறையைவிட்டு வெளியேறினார்.

Also Read  கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

அவருடன் சேர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் வெளியேறினர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ட்விட்டர் AbsentCM என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்… சற்று முன் சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

HariHara Suthan

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

தேர்தல் 2021: தமிழகத்தில் மிகக் குறைவான வாக்குப் பதிவு!

Lekha Shree

எம்.எஸ். தோனியின் பெற்றோருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Shanmugapriya

கொரோனா நிவாரணப் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி…!

sathya suganthi