பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!


மேற்கு வங்க முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பின் மத்திய அரசை வாட்டி வதைத்து வருகிறார் மம்தா பேனர்ஜி. யாஸ் புயல் பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மோடியை காக்க வைத்தது முதல் தலைமைச் செயலாளரை அரசு ஆலோசகராக நியமித்தது வரை மோடிக்கே ஆட்டம் காட்டிவிட்டார் தீதி.

பாஜகவை இவர் துவம்சம் செய்ய காரணமும் உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் கட்சியின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரியின் மொத்த குடும்பமும் சில முக்கிய நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்தனர்.

அவ்வளவுதான் தேர்தலில் திரிணாமுல் படு தோல்வியை சந்திக்கும் என மம்தாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் செயல்பட்டார் மம்தா.

பாஜகவுக்கு மட்டும் தான் வியூகம் அமைக்க தெரியுமா என்ன? என்பது போல மம்தாவும் சீக்ரெக் ஆப்ரேஷன் நடத்தியுள்ளார். திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற முகுல் ராய் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

Also Read  "என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை" - மு.க. அழகிரி

மம்தா கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த இவரின் இழப்பு கட்சிக்கு பலவீனமாக அமைந்தது. அதனை உணர்ந்த மம்தா, பாஜக உங்களை மதிக்கவில்லை நீங்கள் எங்களுடன் வாருங்கள் என அரசியல் காய் நகர்த்த அவரும் சில மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திரிணாமுல் கட்சியில் இணைந்துவிட்டார்.

பாஜகவில் இருந்த போது தன்னால் மூச்சு கூட விட முடியவில்லை என முகுல் ராய் கூறியதை கேட்ட திரிணாமுல் கட்சியின் இனி யாரும் அந்த பக்கம் செல்ல சற்று தயங்குவார்கள் என்றே சொல்லலாம்.

Also Read  நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! - ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

இதற்கு நடுவே சட்டமன்ற தேர்தலின் போது மம்தா வெற்றிக்கு சில ரகசிய உதவிகளையும் முகுல் ராய் செய்ததாகக் கூறப்படுகிறது. பாஜக போல மம்தாவும் இறங்கி வேலை செய்துள்ளார்.

இப்போது பாஜக எம்.பிக்கள் சிலர் திரிணாமுல் கட்சிக்கு தாவ இருக்கிறார்களாம். எப்போதும் பாஜக தான் பிற கட்சியின் எம்.எல்.ஏக்களை வாங்குவார்கள். ஆனால் இந்த முறை அதே டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறாராம் தீதி.

Also Read  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

பல பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்க மம்தா பேனர்ஜி தீவிரமாக உள்ளார் என்பது அவரது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மூன்றாவது பெரிய அணியை உருவாக்க மம்தா தயாராகி வருகிறார். காங்கிரஸ் கட்சியும் இதை அறியாமல் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், பாஜகவை எதிர்க்க மம்தா உடன் இணைந்து 2024 தேர்தலை சந்திக்கலாம் என மேலிடத்துக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்கள். எப்படியோ பாஜகவை ஓரம் கட்ட வேண்டும் என்ற முடிவில் தெளிவாக உள்ளார் மம்தா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Tamil Mint

3 நாளில் ரூ.66,000 கோடி நஷ்டம் – பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி…!

sathya suganthi

“உப்புமா”வை வைத்து கலாய்த்த நெட்டிசன்கள்…! மன்னிப்பு கேட்ட குஷ்பூ…!

sathya suganthi

“கோ-வின்” செயலிக்கு 50 நாடுகளில் வரவேற்பு…!

sathya suganthi

பாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு! வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

Tamil Mint

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

சிம்பிளாகக் கொண்டாடப்படப் போகும் சுதந்திர தினம்: அரசின் திடீர் முடிவு

Tamil Mint

ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இன்றைய விலை நிலவரம் இதோ!

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

என்னை மிஞ்சிய விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்கள் – செல்லூர் ராஜு

Shanmugapriya

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

ஜியோ-கூகுள் கூட்டணியில் விற்பனைக்கு வருகிறது மலிவு விலை ஸ்மார்ட்போன்..!

Lekha Shree