a

ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!


மேற்கு வங்கத்தில் 4இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி கட்டில் அமருகிறது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மும்முனை போட்டி நிலவிய நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் திரிணாமூல் மற்றும் பாஜகவிற்கு இடையே மட்டும் கடும் போட்டி நிலவி வந்தது.

Also Read  நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

ஆனால் நேரம் செல்ல செல்ல தனது விஸ்வரூபத்தை மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி காட்டத் தொடங்கியது. போட்டியிட்ட 292 தொகுதிகளில் 217 இடங்களை கைப்பற்றியது. அதே சமயம் நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

ஓராண்டு மேலாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு களப்பணியாற்றி வந்த நிலையில், பாஜக அதிக இடங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகி வெறும் 74 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆர்எஸ்எம்பி, சுயேட்சை தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக மேற்குவங்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனது.

Also Read  நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

20 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் திமுக! எந்த தொகுதியில் தெரியுமா?

Lekha Shree

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

முதலமைச்சராக மீண்டும் பழனிசாமியை அமர்த்துவதுதான் பாஜக நோக்கம் – அண்ணாமலை

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi

“முக்குலத்தோர் புலிப்படை தேர்தலில் போட்டியிடவில்லை” – கருணாஸ்

Shanmugapriya

“நாளை நான் சென்னையில் இருப்பேன்” – தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி!

Tamil Mint