a

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி


பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அச்சம்பவம் குறித்து அவர் காணொலி காட்சி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தன்னை இப்படி அவமானப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தங்கள் கட்சி பெற்றதால்தான் பிரதமர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தினந்தோறும் தங்களோடு சண்டையிடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

அதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க தான்தான் 20 நிமிடங்கள் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார். “பிரதமரை சந்திக்க சென்ற போது அவர் வேறு கூட்டத்தில் இருப்பதாக கூறி ஒரு மணிநேரத்துக்கு யாரும் பிரதமரை சந்திக்க முடியாது என்று தெரிவித்தனர்” என தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரதமரை சந்தித்தபோது அங்கு பாஜக எம்எல்ஏக்கள் இருந்தனர். கடந்த முறை குஜராத்தில் புயல் சேதங்கள் குறித்து ஆராய அங்கு சென்று பிரதமர், பபாஜக எம்எல்ஏக்கள் உடன்தான் சென்றாரா?

Also Read  அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

பிரதமர்-முதல்வர் இடையிலான சந்திப்பாக அது நடந்திருக்க வேண்டும். கூட்டத்தில் அங்கம் வகிக்க உரிமை இல்லாத அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் நான் எப்படி பங்கேற்க முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை அடுத்த பிரதமரிடம் புயல் சேதம் குறித்த அறிக்கையை அளித்து விட்டு புறப்பட்டு சென்றதாகவும் செல்லும் முன்பு பிரதமரிடம் மூன்று முறை அனுமதி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  "இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது" - ராகுல் காந்தி

மேலும், பிரதமரின் காலில் விழத் தயாராக உள்ளேன் அவர் தனது அகங்காரத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விளக்கமானது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கருத்துக் கணிப்புகள் எல்லாம் எப்போதுமே கருத்து திணிப்புகள் தான்” – அமைச்சர் ஜெயக்குமார்

Shanmugapriya

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு – எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

sathya suganthi

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

8 மாவட்டங்கள்….! எல்லா தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வாஷ்அவுட்…!

sathya suganthi

கொரோனா பாதிப்பால் நேற்று 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்

Tamil Mint

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree

ஏப்ரல் 11 முதல் 14 வரை ‘தடுப்பூசி திருவிழா’ – மத்திய அரசு திட்டம்!

Lekha Shree

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

ஸ்வீட் கேட்டு என்று அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

Shanmugapriya