மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!


மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும், அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே உரசல் நீடித்துவருகிறது. இதற்கிடையே, ஜெகதீப் தங்கரை கவர்னர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பீகாருக்கு என்னதான் ஆச்சு: விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி..!

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர்ராய், ‘‘கவர்னர் ஜெகதீப் தங்கர் தனக்கான அரசியல்சாசன எல்லையை தொடர்ந்து மீறிச் செயல்பட்டு வருகிறார். திரிணாமுல் அரசாங்கம், அதன் நிர்வாகம் பற்றி பொதுவெளியில் கருத்துக் கூறி வருகிறார். 

மேற்கு வங்காளத்தின் 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதற்குமுன் இவ்வாறு நடந்தது இல்லை. மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணியில், திரிணாமுல் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார். எனவே கவர்னரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் விஜய் வர்கியா, ‘‘திரிணாமுல் காங்கிரஸ், அச்சத்தினாலேயே இவ்வாறு செயல்படுகிறது. கவர்னர் தனது அரசியல் சாசன கடமையைத்தான் செய்து வருகிறார். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதத்துக்கு எந்தப் பலனும் இருக்காது’’ என பதில் கூறியுள்ளார்.

Also Read  புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

Lekha Shree

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!

Shanmugapriya

தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை – சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை

sathya suganthi

‘அப்போது விஸ்மயா இப்போது சுனிஷா’ – கேரளாவில் தொடரும் தற்கொலைகள்… பதறவைக்கும் ஆடியோ வெளியீடு..!

Lekha Shree

தலைநகரில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி எரித்து கொலை..!

Lekha Shree

ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்தால் பார்லே ஜி டெலிவரி செய்யப்பட்ட வினோதம்!

Shanmugapriya

வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

Tamil Mint

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree