காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் கைது….


பூந்தமல்லியில் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்தியா. இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் 2019 ம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்ததாகவும் தனது உணவு முறை குறித்து தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை கேட்க, அவரை உடற்பயிற்சி கூடத்தில் அணுகியதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Also Read  சாட்டை துரைமுருகன் கைது - சீமான் கண்டனம்!

கடந்த ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்ற போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறியுள்ளார். சில மாதங்களாக கணவன், மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு தன்னை சமீப காலமாக துன்புறுத்தியதாகவும் மேலும் தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை அழைத்து விசாரித்தனர். விசாரணையில்  காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - தி.மு.க. எம்.பி. ரமேஷை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

தமிழகம்: 36 மணிநேரத்தில் 2, 512 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

ஆன்லைன் விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… யூடியூபர் மதன் மீது குவியும் புகார்கள்!

Lekha Shree

போதையில் காதலியின் தந்தையிடம் இப்படியா நடந்து கொள்வது….

VIGNESH PERUMAL

பலாத்காரம் செய்த மதகுருவை மணக்க விரும்பி பெண் மனுதாக்கல்… வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!

Lekha Shree

மதுவில் சயனைடு கலந்து 3 பேர் கொலை…முதியவரைத் கைது செய்தது போலீஸ்…

Lekha Shree

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு…!

Lekha Shree

வான்டெட்டாக சிக்கிய வாலிபர் – காவலர் மீது சாக்கடை நீரை வீசி போதையில் அலப்பறை!

Lekha Shree

மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தந்தை அடித்த சம்பவம்!!! குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…

Lekha Shree

500 மூட்டை அரிசியுடன் லாரியை அலேக்காக தூக்கிய பலே திருடர்கள்…

VIGNESH PERUMAL

‘பப்ஜி’ மதன் வழக்கு: குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்..!

Lekha Shree