மோப்ப நாய் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயம்..! பீகாரில் பரபரப்பு..!


பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஓடிச் சென்ற நபர் ஒருவர் ஆற்றில் குதித்து மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் மோப்ப நாய்களிடம் இருந்து தப்பிக்க கந்தக் ஆற்றில் குதித்த நிலையில், மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈஸ்வர் மகன் குமார் கூறுகையில், “எனது தந்தை விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மதுபான சோதனை நடத்துவதற்காக காவல்துறை அல்லது கலால்துறை குழு அப்பகுதிக்கு வந்தது.

அப்போது என் தந்தையைக் கண்ட மோப்ப நாய்கள் அவரை துரத்த தொடங்கின. அவரும் ஓடிச் சென்றார். பின்னர் கந்தக் ஆற்றை நோக்கிச் சென்றவர் தப்பிக்க வேறு வழி தெரியாமல் ஆற்றில் குதித்துவிட்டார். இதையடுத்து அவரை காணவில்லை. காவல்துறையினர் என் தந்தையைக் கொன்றுவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.

Also Read  மாணவிகள் உணவில் போதைப்பொருள் கலந்து பாலியல் வன்கொடுமை..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!

இதனால் அப்பகுதியை சுற்றி ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். ஈஸ்வரை தேடியபோது அவர் ஆற்றில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மாநில பேரிடர் படை ஆற்றில் தேடிய போதும் ஈஸ்வரை கண்டறிய முடியவில்லை.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “மாவட்டத்தில் எங்களிடம் மோப்ப நாய்கள் இல்லை. எனவே, மோப்ப நாய்கள் மூலம் போலீஸ் நடவடிக்கை எடுக்க முடியாது.

Also Read  கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா : ஒரே நாளில் 88 பேர் பலி

ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க மோப்பநாய் தேவைப்படும்போது நாயை ஏற்பாடு செய்ய மாநில தலைமையகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

Shanmugapriya

இந்தியாவில் Ford கார் உற்பத்தி விரைவில் நிறுத்தம்? – 4,000க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம்..!

Lekha Shree

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு.

mani maran

முல்லை பெரியாறு அணை விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

Lekha Shree

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Lekha Shree

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

Tamil Mint

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

Tamil Mint

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi