பட்டியலினப் பெண்ணை மணந்ததால் வேலையை இழந்த இளைஞர்…! போலீசில் புகார்..!


ஹைதராபாத்தில் பட்டியலினப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலையை இழந்துள்ளார் ஒரு இளைஞர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ளது வனஸ்தலிபுரம்.

அப்பகுதியில் வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார் நக்கா நாதமுனி கவுட் (32).

Also Read  திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

இவர் அக்கோயிலுக்கு வரும் பிரேமலதா (27) என்ற பட்டியலினப் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். அண்மையில் நாதமுனி பிரேமலதாவை திருமணம் செய்துகொண்டார்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட அக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமைய்யா, உறுப்பினர் சத்தியநாராயணா, மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் நாதமுனியின் வேலையை பறித்துள்ளனர்.

Also Read  மணமேடையில் தூங்கிய மணமகன்…! வைரல் வீடியோ இதோ..!

அதையடுத்து நாதமுனி நேற்று வனஸ்தலிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “எனது மனைவியின் ஜாதி பெயரை மிகவும் இழிவாக பேசினர்” என கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வனஸ்தலிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கோயில் நிர்வாகிகளை தேடி வருகின்றனர்.

Also Read  குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

Lekha Shree

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரகசியம்..மனம் திறக்கும் நீரஜ் சோப்ர!

suma lekha

1,585 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ..!

Lekha Shree

ஜெயிச்சது மேரி கோம் தான் மக்களே: மத்திய அமைச்சரின் ஊக்கம் கொடுக்கும் ட்வீட்.

mani maran

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

சுவாச அமைப்புகளை வலுப்படுத்தும் சத்குருவின் சிம்ஹ கிரியா… முழு விவரம் இதோ..!

Lekha Shree

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்..!

Lekha Shree