மதுரை: குடிபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…!


மதுரையில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் மாணிக்கம் பிள்ளை பேட்டையை சேர்ந்த திருமலை என்ற 75 வயது மூதாட்டி திருமணமாகாமல் ஆதரவற்ற நிலையில் சோழவந்தானில் உள்ள கோவிலில் அன்னதானம் மற்றும் தெரிந்தவர்களிடம் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவருடைய சகோதரி மகன் பாண்டி என்பவர் மாதம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வாராம்.

இரவு நேரத்தில் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஜவுளி கடை வாசலில் தூங்கி காலையில் எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த மூதாட்டி.

Also Read  "தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது" - தமிழக அரசு

இதேபோல் நேற்று முன்தினம் இரவு அதே ஜவுளிக்கடையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் ரோந்து பணிக்கு வந்த போலீசார் அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சோழவந்தான் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நடுஇரவில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை தூக்கி செல்வது போல காட்சிகள் பதிவாகி உள்ளது.

Also Read  அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா..!

சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் கருப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என தெரியவந்துள்ளது.

மேலும், அந்த இளைஞரை சில வழக்குகளில் குற்றவாளியாக இருந்து சிறை தண்டனை அனுபவித்து 10 நாட்களுக்கு முன்பாக வெளியே வந்ததாக தெரியவந்தது. இதனால், அவர் இந்த மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு போலீசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

Also Read  சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை…!

அப்போது அவர், குடிபோதையில் இளம்பெண் என நினைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அவ்வளவு பாடுபட்டும் வீணா போச்சே… பெண் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்த நபர் பலி…!

Lekha Shree

அரசு விரைவு பேருந்துகள் 6-ந்தேதி இரவு முதல் இயக்கம்: 400 பேருந்துகளுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? – இன்று மீண்டும் கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

sathya suganthi

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்..!

Lekha Shree

ஊரடங்கு அறிவிப்பால் ஸ்தம்பித்த போக்குவரத்து…!

Lekha Shree

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.!

suma lekha

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லாக் டவுனை நீக்கிய அரசு, சரியான முடிவு தானா?

Tamil Mint

“அதிமுகவில் சசிகலா சேர்ப்பா?” – ஓபிஎஸ் பதில்..!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Shanmugapriya

குட்கா வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint