அவ்வளவு பாடுபட்டும் வீணா போச்சே… பெண் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்த நபர் பலி…!


சென்னையைில் பெண் இன்ஸ்பெக்டர் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மழையில் நனைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த உதயகுமாருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கல்லறை மீது மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து டி.பி.சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடது. அவர் சக போலீசார் உடனடியாக விரைந்து வந்தார்.

Also Read  ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

மயங்கி கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வித தயக்கம் இன்றி அலேக்காக தூக்கி தனது தோளில் சுமந்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார்.

பின்னர் அவரை, ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Also Read  ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய பாராட்டை பெற்று வருகிறது.

ஒருவர் உயிருக்கு போராடும் நேரத்தில் மற்ற போலீஸ்காரர்களை உதவிக்கு அழைக்காமல் நேரிடையாக களப்பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டினார்.

Also Read  ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் - வானிலை ஆய்வு மையம்

காவல் ஆணையரும் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்ற அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயனாளர்களின் சாதியை குறிப்பிட்டு டோக்கன் விநியோகம்; தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சர்ச்சை!

Tamil Mint

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

“நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் மாபெரும் சக்தியாக உருவாகும்” – கருணாஸ்

Lekha Shree

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

தமிழகத்தில் இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

suma lekha

பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

Tamil Mint

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Lekha Shree