a

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!


சுருக்கமான வசனம்,புதுமையான காதல் களம் என்றதும் நினைவுக்கு வருவது மணிரத்னம்.

வளர்ந்து வரும் அத்தனை இயக்குனரும் தவிர்க்க முடியாத சகாப்தம் மணி ரத்னம்.

இவரின் மௌனராகம், நாயகன், ரோஜா, பம்பாய், அலைபாயுதே போன்ற படங்கள் காலம் பேசும் காவியமாக போற்றப்படுகிறது.

1985இல் பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த மணிரத்தினத்துக்கு மௌவுன ராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, கண்ணத்தில் முத்தமிட்டாள் என வெற்றி திரைப்படங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

Also Read  இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்.....

முத்து முத்தாய் எடுக்கப்பட்ட இவரின் ஒவ்வொரு திரைப்படங்களையும் கோர்த்தால் தமிழ் சினிமாவின் விலைமதிப்பற்ற முத்து சரம்.

இவரது மெட்ராஸ் டாக்கீஸ், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து உள்ளது.

வரலாற்று காவியங்களை மையக் கருவாக கொண்டு திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவம் பெற்றவரான மணிரத்தினம், தற்போது மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

புகழ்பெற்ற தஞ்சை மன்னன் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்று புதினமான கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்கி வருகிறார்.
பொன்னியின் செல்வனின் லட்சக்கணக்கான ரசிகர்கள், அதை திரை ஓவியமாக காணவும் அந்த படம் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ளவும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read  விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

இந்த நிலையில் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்னத்துக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் மணிரத்னத்தின் பிறந்தநாளில் பொன்னியின் செல்வன் குறித்த அப்டேட்டை தருமாறு அவருக்கு ரசிகர்கள் பலரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Also Read  மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

மேலும், #PonniyinSelvan என்ற ஹேஷ்டேன் டுவிட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

சத்குருவுடன் ஆனந்த நடனமாடிய நடிகை சமந்தா!

Lekha Shree

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?

Lekha Shree

சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பாரதிராஜா பட ஹீரோ… கதறி அழுது உதவி கேட்கும் வீடியோ… கண்கலங்கும் நெட்டிசன்கள்!

Tamil Mint

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

நடிகர் பிரித்விராஜ் படத்தில் இணையும் அஜித் பட வில்லன்? வெளியான சூப்பர் தகவல்!

Lekha Shree

விவாகரத்துக்கு பின் திருமண நாளில் ஒன்று சேர்ந்துள்ள ‘நேசம் புதுசு’ ஜோடி…!

Lekha Shree