அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டுக்கள்..!


சென்னை டிபி சத்திரம் அருகே மழையில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Also Read  பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில், “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ..!

இதுகுறித்து ராஜேஸ்வரி கூறுகையில், “அந்த நபருக்கு முதலுதவி கொடுத்து தூக்கிக்கொண்டு சென்றபோது அங்கே ஆட்டோ ஒன்று வந்தது. அதில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

பின்னர், அவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தேன். அவர் தற்போது நலமாக உள்ளார். அவருடன் அவரது தாயார் இருக்கிறார்.

Also Read  மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது: விஜயபிரபாகரன் பேட்டி.!

அவர்களிடம் கவலைப்பட வேண்டாம். காவல்துறை உங்களுக்கு உதவும் என கூறினேன்” என கூறினார்.

அதேபோல் சென்னை காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் இதுகுறித்து கூறுகையில், “துரிதமாக செயல்பட்டு சுயநினைவின்றி கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்போது அவர் உயிர் பிழைத்துள்ளார். ராஜேஸ்வரி சிறந்த அதிகாரி, எல்லா பாராட்டுகளுக்கும் உரித்தானவர்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊசியை அகற்ற குழந்தையின் விரலை வெட்டிய கொடூரம்..!

Lekha Shree

குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!

Devaraj

பிரியாவிடை பெற்ற பன்வாரிலால் புரோஹித்.!

suma lekha

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்…! டீக்கடைகள் திறப்பு…!

sathya suganthi

கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

suma lekha

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன?

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று நிறைவேற்றப்பட உள்ளது.!

suma lekha

உணவில் விஷம் வைத்து கொலை! – வாயில்லா ஜீவன்களுக்கு அரங்கேறும் கொடூரம்!

Lekha Shree