a

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!


உத்தரபிரதேசம் திக்ரி கிராமத்தில் விவசாயி ஒருவருடைய மகளுக்கும் ரவீந்திர பாட்டீல் என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் குடித்துவிட்டு போதையில் வந்துள்ளனர். இதுபோதாதென்று மணமேடையில் இருந்த மணப்பெண்ணை தனது நண்பர்கள் முன்னிலையில் வற்புறுத்தி நடனம் ஆட சொல்லியிருக்கிறார் ரவீந்திரன்.

Also Read  மூட நம்பிக்கையால் முடிவுக்கு வந்த வாழ்க்கை…

ஆனால், மணப்பெண் நடனம் ஆட முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் அப்பெண்ணிடம் முரட்டுத்தனமாக நடந்துள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மணப்பெண் திருமணத்தை உடனே நிறுத்திவிட்டு கொடுத்த வரதட்சணையையும் திருப்பி கேட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

Also Read  ஓட்டுநர் உரிமம் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசாரிடம் மணமகன் வீட்டார் மணப்பெண் வீட்டாரை சமாதானம் செய்ய சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் சமரசம் பேசவந்துள்ளனர் காவல்துறையினர். ஆனால், அவர்களிடம் அப்பெண் திருமணத்துக்கு முன்பே குடித்துவிட்டு கலாட்டா செய்யும் அந்த நபரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Also Read  சைலஜா டீச்சருக்கு பதில் வீணா ஜார்ஜ்…! பினராயி அமைச்சரவையில் 3 பெண் ஆளுமைகள்…!

அதனால் போலீசார் வாங்கிய வரதச்சனையை திருப்பி தருமாறு மணமகன் வீட்டாரிடம் கூறி பிரச்சனையை முடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது குடியால் இப்படி கூடிவந்த திருமணம் கெட்டுவிட்டதே என மணமகன் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

கொரோனா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தே தடுப்பூசி போட வேண்டும்.. மத்திய அரசு..

Ramya Tamil

நரேந்திர மோடி மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடி தடை செய்யப்பட்டுள்ளதா? #FactCheck

Shanmugapriya

யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது – நேபாள் பிரதமர்

Shanmugapriya

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – மகுடம் யாருக்கு? : இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை…!

sathya suganthi

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint