a

கேரளாவில் கொரோனா பாதிப்பிலும் தடையின்றி நடந்த திருமணம்; குவியும் வாழ்த்துகள்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் மணமகன் பாதிக்கப்பட்டதால், முழு கவச உடை அணிந்து மணப்பெண், தனது வாழ்க்கைத் துணையை கரம்பிடித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சரத்மோன் என்பவருக்கும், அபிராமி என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 25-ம் தேதி திருமணம் செய்ய கடந்த ஆண்டே நிச்சயம் செய்யப்பட்டது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த சரத்மோன் தனது திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளா திரும்பினார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆலப்புழாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

Also Read  சேலம்: கொரோனா தடுப்பூசி போட காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம்

இதற்கிடையில், சரத்மோன் மற்றும் அபிராமிக்கு திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் தேதி திருமணம் செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாத நிலையில், மணப்பெண் அபிராமி, முழு கவச உடை அணிந்து, கொரோனா விதிகளை பின்பற்றி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்கு மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியதை அடுத்து, கொரோனா பாதுகாப்பு கவச உடையுடன் சரத்மோன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வந்தார் அபிராமி. அதனைத் தொடர்ந்து அபிராமி கழுத்தில் சரத்மோன் தாலி கட்டினார். திருமணம் செய்துகொண்ட சரத்மோன் – அபிராமி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” – மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

Shanmugapriya

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!

Shanmugapriya

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

எடுத்துக்காட்டாக விளங்கும் கேரளா! – கரோனா தடுப்பூசிக்காக ₹800 நிதி உதவி செய்யும் மக்கள்!

Shanmugapriya

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya