மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு


 
மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் இன்னும் நிலவுவதால் திரையரங்குகளுக்கு வரத் தயங்குகிறார்கள். திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளங்களில் வெளியான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்துள்ளார்கள்.
 
இந்தக் காரணங்களை முன்வைத்து மாஸ்டர் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமையை விற்றுள்ளதால் வரும் பொங்கலுக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படுவதாகப் புதிய தகவல் ஒன்று வெளியானது. இதனால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
 
மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான பிறகே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படும். எனினும் ஜனவரியிலும் தற்போதைய நிலைமை நீடித்தால் மட்டுமே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை நேரடியாக வெளியிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என செய்தி வெளியானது. இதனால் எந்தச் செய்தியை நம்புவது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
 
மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தனது இறுதி முடிவை தயாரிப்பாளர் முறையாக அறிவிக்கவேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள் அதன் படி மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடுவதில் உறுதி என  தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
 
அதில் ” ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓ.டி.டி. தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும், தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம்.ரசிகர்களும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் காணவே விரும்புகின்றனர் .வதந்திகளை நம்ப வேண்டாம், விரைவில் நல்ல தகவல் வரும்” என கூறப்பட்டு உள்ளது.

Also Read  விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?

sathya suganthi

“கொரோனா 3வது அலையை தவிர்க்க முடியாது!” – தமிழக அரசு எச்சரிக்கை!

Lekha Shree

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree

தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி

Tamil Mint

வாக்குச் சேகரிப்புக்கு அலைக்கழிக்கப்பட்ட விஜயகாந்த் – ஓட்டு போட வராதது ஏன்…?

Devaraj

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்கள் நீக்கம் – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம்!

Lekha Shree

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint