தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு!


தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணையும் முதல் திரைப்படம், இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே இப்படத்தில் இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை மக்களிடையே உண்டாகியது. 

Also Read  'இடிமுழக்கம்' - சீனுராமசாமி-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில்..!

கடந்த ஏப்ரல் மாதமே திரையிடப்பட்டிருக்க வேண்டிய படம், கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியிடப்படவில்லை. இந்த பெருந்தொற்று காலத்தில் பல நடிகர்களின் படங்கள் ஒடிடியில் வெளியிடப்பட்ட நிலையில், இப்படமும் அவ்வாறு வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் படக்குழு அத்தகவலை மறுத்தது.

அதைத்தொடர்ந்து இன்று, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என அப்படக்குழு தெரிவித்துள்ளது. இது தளபதி மற்றும் மக்கள் செல்வனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  “கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி... குவியும் வாழ்த்துக்கள்...!

மேலும் தணிக்கைகுழு மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

இப்படத்தை ‘கைதி’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு?

Lekha Shree

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ‘மண்டேலா’ திரைப்படம்!

Lekha Shree

விஜய்யுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்? அப்ப இன்னொரு ’மாஸ்டர்’ பீஸ் ரெடி!

Tamil Mint

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

நடிகர் விவேக் மரணம்: மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

suma lekha

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

விஷால் படத்தில் நடிக்கும் ‘பாரதி கண்னம்மா’ சீரியல் நடிகர்..!

Lekha Shree