மேத்யூ வேட் அதிரடியால் வீழ்ந்தது பாகிஸ்தான்…! இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா..!


டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இதனால் டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதுகிறது ஆஸ்திரேலியா.

துபாயில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

Also Read  ஒசாமா பின்லேடன் தியாகி - இம்ரான் கான் வாய் தவறி கூறி விட்டதாக விளக்கம்

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் சீரான தொடக்கத்தை கொடுத்தனர்.

39 ரன்களில் பாபர் ஆட்டமிழக்க பின்னர் வந்த ஸமான் ரிஸ்வானுடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தார். இருவரும் அரைசதம் விளாச பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை எடுத்தது.

Also Read  விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு - கண்ணீர் மல்க அறிவிப்பு

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது அந்த அணி.

இதையடுத்து வார்னர் மிட்செல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மிச்செல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடியும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

49 ரன்கள் சேர்த்து இருந்த வார்னரும் பெவிலியன் திரும்பினார். இக்கட்டான சூழலில் களமிறங்கிய வேட் கடைசி 9 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

இதனால், நாளை மறுதினம் நடைபெறும் டி20 உலக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

Also Read  காலையில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் - மாலையில் தென் ஆப்பிரிக்காவை பொளந்து கட்டிய பாபர் ஆசாம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : இந்தியா- தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

suma lekha

பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

Lekha Shree

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan

“ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் சவுரவ் கங்குலி”

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி – வெற்றியின் ரகசியத்தை கூறிய கே.எல்.ராகுல் !

Lekha Shree

கான்பூர் டெஸ்ட்: நியூசிலாந்தை கலங்கடிக்கும் இந்திய அணி.!

suma lekha

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

தமிழக அணியிலிருந்து நீக்கப்பட்ட நடராஜன்; காரணம் என்ன?

Tamil Mint

ஆண்கள் ஹாக்கி அரையிறுதி போட்டி..போராடி தோற்றது இந்திய அணி!

suma lekha

இந்தியாவின் டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் கே.எல்.ராகுல்?

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

Lekha Shree