a

மயிலாடுதுறை: பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது


சென்னை பிஎஸ்பிபி பள்ளியை தொடர்ந்து மயிலாடுதுறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மயிலாடுதுறையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2010 ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 2018 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவி, விளையாட்டு ஆர்வத்தால் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

Also Read  பாலியல் வழக்கு - ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பலமுறை இரட்டை அர்த்தத்தில் பேசி, உடல் ரீதியாக சீண்டியதோடு, 2018-ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.

இதையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read  PSBB பள்ளி : மாணவர்களுக்கு மேலும் 8 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை...! பகீர் தகவல்கள்...!

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததையடுத்து உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அந்த ஆசிரியர் தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக மேலும் 2 மாணவிகள் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

Also Read  தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அவர்களின் சாட்சிகளை கொண்டு அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Lekha Shree

சென்னையில் 2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Tamil Mint

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

Tamil Mint

இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம்

Tamil Mint

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

Lekha Shree

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint