வெவ்வேறு வருடத்தில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்.!


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரட்டைக்குழந்தைகள் பிறந்த நேரம் ஒரு வருடம் மாறியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த இரட்டை குழந்தைகள் வெவ்வேறு வருடத்தில் பிறந்துள்ளது. வழக்கமாக உருவத்தில் ஒரே மாதிரியாக தோற்றம் அளிக்கும் இரட்டையர்களுக்கு இடையே அவர்கள் பிறந்த நேரம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடும். அந்த சில நிமிட மாறுபாடுடன் சமீபத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு இடையே பிறந்த தேதி, நேரம், நாள், ஆண்டு என அனைத்தையும் மாற்றி உள்ளது.

அதாவது முதல் குழந்தை டிச.31 2021 இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது. இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வருடமே மாறிப்போய் உள்ளது.

Also Read  ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்! கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை!

இதுகுறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கூறுகையில், ‘இது எனது பணி காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்’ என தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு மில்லியன் வாய்ப்புகளில் அரிதினும் அரிதாக இது மாதிரியான நிகழ்வுகள் இருப்பதுண்டு என சொல்லப்பட்டது.

குழந்தைகளை பெற்றெடுத்த பாத்திமா கூறிகையில், தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு நாட்களில் பிறந்த நாள் வருவது தனக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  அமெரிக்காவை அதிரவைத்த சூறாவளி…! 100 பேர் பலி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi

“இங்கு இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது” – அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டு!

Lekha Shree

வீட்டில் தீ வைத்து விட்டு சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்த பெண்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

‘ஹாஹா எமோஜி’க்கு ‘பத்வா’ தடை விதித்த இஸ்லாமியர்…!

sathya suganthi

உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

Devaraj

சாக்லேட் உடைகளில் அசத்திய அழகிகள்.!

suma lekha

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம் இன்று

Tamil Mint

பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்

Tamil Mint

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ரூ.196 கோடி நிவாரணம் – கருப்பினத்தவரின் குடும்பத்துக்கு அறிவிப்பு

Devaraj

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை…!

Devaraj

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree