“இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஓமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்களப் பணியாளர் என்ற முறையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜன.12) பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார்.

Also Read  பாலியல் புகார்…! பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு தொற்றின் தன்மை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,21,000 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. அடுத்தவாரம் வழக்கம்போல் சனிக்கிழமையில் முகாம் நடைபெறும். மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும். அதே சமயம்,தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்களாக உள்ளனர். மேலும்,சிறார் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.

Also Read  வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது – காரணம் இதுதான்

மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து. எனவே,கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், ”தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011 பிப்ரவரியிலேயே திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால்,அதிமுகவால் தான் இத்திட்டப் பணிகள் தாமதமானது.மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திமுக அரசின் திட்டம்.இது குறித்து அதிமுக மார்தட்டி கொள்வதில் என்ன ஞாயம் இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

“நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்” – செவிலியர்களின் காலில் விழுந்த டீன்!

Lekha Shree

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி?

Lekha Shree

“ஏழை மக்களின் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசு!” – ஈபிஎஸ் கண்டனம்..!

Lekha Shree

தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்: பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

மீண்டும் தொடங்க போகும் சேலம் எட்டு வழி சாலை: மத்திய அரசு உறுதி

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

Lekha Shree

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint

பாஜகவில் இணையும் மு.க. அழகிரி? – சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!

Lekha Shree

அடுத்த அவைத்தலைவர் யார்.? : மதுசூதனனின் பதவிக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு.

mani maran

“கனமழை முடிந்துவிட்டது!” – சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

Lekha Shree