“பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசினார்!” – குற்றம்சாட்டும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்…!


விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த போது அவர் ஆணவத்துடன் பேசியதாக மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் நேற்று ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்ற சத்யபால் மாலிக் பேசுகையில், “நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம் விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர் என்றேன்.

Also Read  கலக்கலான நடனத்தால் இணையவாசிகளை கவர்ந்த மும்பை காவலர்

அதற்கு அவர் ஆணவத்துடன் அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்? என்று கேட்டார். நான் அவரிடம் ஆமாம் நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள் என்று கூறினேன்.

அவர் உடனே நீங்கள் அமித்ஷாவை பாருங்கள் என்றார்.

நானும் அமித் ஷாவை பார்த்தேன். அவர் அப்போது ஒரு நாய் இருந்தாலும்கூட பிரதமர் இரங்கல் கடிதத்தை அனுப்புகிறார் என்று கூறினார்” என கூறினார்.

இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருடைய பேச்சை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

Also Read  டெல்லி: இளம்பெண்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய கும்பல்..!

சத்யபாலின் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், “இந்த ஒரு பேட்டி பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கை காட்டுகிறது” என காங்கிரஸ் சாடியுள்ளது.

மேலும், “இது ஜனநாயக நாடு கவனிக்க வேண்டிய விஷயம்” என்றும் கூறியுள்ளது.

Also Read  மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

ஜம்மு காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட சத்யபால் மாலிக், பின்னர் கோவா ஆளுநராக இருந்தார். தற்போது அவர் மேகாலய மாநில ஆளுநராக உள்ள நிலையில், தன்னுடைய கருத்துகளுக்காக பணியிட மாறுதல்கள் நிகழும் என்றால் அதற்காக தான் சிறிதும் அஞ்சப்போவதில்லை என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மொத்தம் 92 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் – உள்துறை அமைச்சகம்

Tamil Mint

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய கொரோனா திரிபு…!

Lekha Shree

ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் மரணம் – கேரளாவை அதிர வைத்த வரதட்சணை புகார்கள்…!

sathya suganthi

கேரளாவில் கனமழை… நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மாயம்..!

Lekha Shree

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன இந்திய எல்லை பிரச்னை தொடர்பாக விளக்கம்:

Tamil Mint

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடி பதிவிட்ட ஆசிரியை பணியிடை நீக்கம்..!

suma lekha

“தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டியதில்லை” – Zomato விவகாரம் குறித்து எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

அமேசான் வர்த்தக நிறுவனம் மூலம் கஞ்சா விற்பனை…! 5 பேர் கைது..!

Lekha Shree