a

ஓடிலாம் போகலங்க…! கடத்திட்டாங்க…! வைர வியாபாரி சோக்சி வழக்கில் புது திருப்பம்


மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு தப்பினார்.

வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமை பெற்ற சோக்சி, அந்நாட்டில் வசித்து வந்ததாக தகவல் வெளியானது.

Also Read  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி - மத்திய அரசு

தப்பியோடிய சோக்சியை இந்தியா அழைத்துவரும் முயற்சியில், சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சோக்சி மாயமானார். அவர், வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றாக கூறப்பட்டது.

ஆன்டிகுவா அருகே உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிக்காவில் சோக்சி பிடிபட்டார்.

அவர் சட்ட விரோதமாக அந்த நாட்டுக்குள் நுழைந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.

Also Read  சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு - மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ்

இந்நிலையில், டொமினிக்கா மற்றும் இந்திய போலீசாரைப் போல தோற்றமளித்த சிலர், சோக்சியை ஆன்டிகுவாவில் இருந்து கப்பலில் கடத்தி, டொமினிக்கா அழைத்துச் சென்றதாக, சோக்சியின் வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்தார்.

சோக்சி கடத்தப்பட்டதாக, அவரது வழக்கறிஞர் புகார் அளித்து உள்ளார் என்றும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் என இந்திய பெண் உள்பட சில பெயர்களையும் அவர் வழங்கி உள்ளதாகவும் டொமினிக்கா போலீஸ் தெரிவித்துள்ளனர்.

Also Read  ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ஒருவேளை, சோக்சி கடத்தப்பட்டது உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் ரத்தமா? மத்திய அரசு விளக்கம்…!

sathya suganthi

கடலில் இறங்கி மீன் வலையை சரி செய்த ராகுல் காந்தி – அனுபவத்தை பகிர்ந்த மீனவர்கள்

Jaya Thilagan

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

லீக்கான அர்னாப்பின் வாட்ஸ்-அப் உரையாடல்… சிக்கலில் அர்னாப்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Tamil Mint

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

“ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்”- அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya