“மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கும்” – கர்நாடக முதல்வர் எடியூரப்பா


மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழகம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாடு நிலைப்பாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக் கூறி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

Also Read  தமிழகம்: கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை?

தமிழக முதல்வர் ஸ்டாலினும் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார். இந்த சூழ்நிலையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகதாதுவில் எந்த ஒரு கட்டுமான பணியை மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தப்பட்டது.

Also Read  கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

ஆனால், மேகதாதுவில் அணை கட்டுவதில் நூறு சதவிகிதம் உறுதியாக இருப்பதாகவும் அணைகட்ட கர்நாடகாவுக்கு உரிமை உண்டு என்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்நிலையில் மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பெங்களூர் வந்தார். கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார்.

Also Read  தமிழகத்தில் தொடங்கிய 3-ம் அலை? - என்ன இது அடுத்த சோதனை?

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கஜேந்திர சிங் ஷெகாவத், “மேகதாது உள்பட கர்நாடகாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். அதேசமயம் சட்டப்படி மத்திய அரசு முடிவெடுக்கும்” என கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடியூரப்பா, “மேகதாது அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். மத்திய அரசிடம் அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக கொடுத்துள்ளோம். மத்திய அரசு உரிய அனுமதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகம் குறித்து நான் பேச விரும்பவில்லை” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!

Tamil Mint

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

Tamil Mint

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு

Tamil Mint

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!

Shanmugapriya

முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

Devaraj

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

அசத்தலான சுவை! – விற்பனையில் பட்டையைக்கிளப்பும் நூர்ஜஹான் மாம்பழம்!

Shanmugapriya

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree