‘ஹூட்’ டை பிரபலப்படுத்தவே புனித்துக்கு இரங்கல் செய்தி!! ரஜினிக்கு குவியும் எதிர்ப்பு


தன் மகளின் ‘ஹூட்’ ஆப்பை பிரபலப்படுத்தவே புனித் ராஜ்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடைப்பால் காலமானார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.  அந்த நேரத்தில் நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அவருக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டது..புனித் இறந்த 13வது நாளான நவம்பர் 10ல் நடிகர் ரஜினி, டுவிட்டர் சமூகவலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அதனை தன் மகள் சவுந்தர்யா துவங்கியுள்ள, ‘ஹூட்’ செயலியில் பதிவேற்றம் செய்தார்.

Also Read  "நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா" - வடிவேலுவுக்கு வித்தியாசமாக வாழ்த்துகள் கூறிய சேரன்!


அதில் அவர், நான் மருத்துவமனையில் இருந்த போது புனித் அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்கு பின் தான் தெரிவிக்கப்பட்டது. என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார். அவர் இழப்பை, கன்னட சினிமா துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.இவ்வாறு குறிப்பிட்டுஇருந்தார்.

இந்த டுவிட்டர் இரங்கல் செய்தியை, தன் மகள் சவுந்தர்யா துவங்கியுள்ள, ‘ஹூட்’ செயலியில் பதிவேற்றம் செய்தார்.  இதற்கு புனித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தன் மகளின் ‘ஹூட்’ செயலியை பிரபலப்படுத்துவதற்காக, இரங்கல் செய்தியை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also Read  வாக்களித்த 'குக் வித் கோமாளி' நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மெலிந்து போன நிலையில் நடிகர் பிரபு… என்னாச்சு அவருக்கு?

suma lekha

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

இந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஜாம்பவான் ’மைக் டைசன்’… அட இவரு தான் ஹீரோவா?

suma lekha

கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி – சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

HariHara Suthan

விஜய் சொகுசு கார் விவகாரம்… நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

சினிமா தொழிலாளர்களுக்கு “கேஜிஎப்” நாயகன் செய்த உதவி – குவியும் வாழ்த்து

sathya suganthi

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

விஜய் டிவி பிரியங்காவின் யூடியூப் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

குக் வித் கோமாளி 3 எப்போது? Chef தாமு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

Lekha Shree

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint