டிஜிட்டல் உலகை ஆளப்போகும் METAVERSE…! மாய உலகை உருவாக்க போகும் கூகுள், பேஸ்புக்..!


METAVERSE எனப்படும் மாய உலகம் தான் நாளை டிஜிட்டல் உலகை ஆளப்போவதாக கூறப்படுகிறது. இந்த METAVERSE என்றால் என்ன?

சமீபத்தில் முகநூலுக்கு மெட்டா என பெயர் சூட்டியிருந்தார் மார்க் ஜூகர்பெர்க். இதன் பின்னணியில் இருப்பது புதிய மெய்நிகர் உலகமும் இணைய உலகின் அடுத்த கட்டமுமான META UNIVERSE தான்.

இந்த வார்த்தைகளை இணைத்து உருவானது METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகுக்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் உலகு என்பதுதான் இதன் அர்த்தம்.

METAVERSE என்ற இந்த பதம் முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் Snow Crash என்ற அறிவியல் கதையில் காணப்பட்டது.

Also Read  தாலிபான்களிடம் லட்ச கணக்கில் ஆயுதங்கள்- அதிர்ச்சி தகவல் !

அதேபோல் மற்றொரு நாவலான ரெடி பிளேயர் 1 இந்த மாய உலக அடிப்படையில் உருவானது. இதை இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 2018 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்திருந்தார்.

மேலும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் மெஷ் ஆகிய நிறுவனங்கள் இந்த மெய்நிகர் உலகத்தை உருவாகும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் - மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றி அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்வதுதான் விர்ச்சுவல் ரியாலிட்டி. நிலாவிற்கு நாம் செல்ல முடியவில்லை என்றாலும் நிலவிற்கு போய் அங்கு வாழ்வது போன்ற உண்மையான உணர்வை இந்த மெய்நிகர் உலகத்தின் மூலம் வழங்க முடியும்.

அப்படியான கற்பனை உலகம் தான் இந்த METAVERSE. இந்த டிஜிட்டல் உலகத்தில் டிஜிட்டல் கரன்சியை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

சில ஆன்லைன் கேம்கள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்துகின்றன. இந்த கிரிப்டோகரன்சி நிறைய தொகையை சம்பாதிக்க உதவுகிறது.

இந்த METAVERSE எனப்படும் மெய்நிகர் உலகம் கிரிப்டோகரன்சியின் பயன்பாட்டை தவிர்க்க முடியாததாக மாற்றுமாம். பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல் மின்னல் வேகத்தில் நடப்பதால் பாதுகாப்பான பரிமாற்ற முறையை வழங்கும் என்கிறார்கள்.

Also Read  பதவி விலகும் பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரி..என்ன காரணம்..!

இதனால், இந்த மாய உலகத்திற்குள் மக்கள் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் நாளைய டிஜிட்டல் உலகின் அசுரர் வளர்ச்சியை இதுகுறிப்பதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனநலனை பாதுகாக்க ஸ்பெயின் நாட்டில் ‘Crying Room’ அறிமுகம்..!

Lekha Shree

உலகின் காஸ்ட்லியான பர்கர்… விலை என்ன தெரியுமா?

Lekha Shree

தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தான்… மலாலா கவலை..!

suma lekha

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha

எலி கடித்ததால் கொரோனா பரவல்? தீவிர விசாரணையில் தைவான் அரசு..!

Lekha Shree

மியான்மருக்கு ஆயுதம் அனுப்ப ஐக்கிய நாடுகள் சபை தடை!

Shanmugapriya

தடுப்பூசிப் போட்டுக்கொண்டால் “டெல்டா” கொரோனா வேகமாக பரவாது…!

sathya suganthi

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

மறைந்த பிளாக் பேந்தர் நடிகருக்கு கிடைக்கும் கவுரவம்.!

suma lekha

92.61 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

Tamil Mint

ரூ.215 கொடுத்து கூகுள் வலைதளத்தை வாங்கிய அர்ஜென்டினா வெப் டிசைனர்…!

Devaraj