மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!


மெக்சிகோ சிட்டி நகரில் அகழ்வாராய்ச்சியாளர்கள் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரத்தின் மேலதிக பகுதிகளை  கண்டுபிடித்துள்ளனர். 

மெக்சிகோவின் தேசிய மானிடவியல் மற்றும் வரலாற்று மையம் “இதற்கு முன்பும் பல மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்தில், 119 மண்டை ஓடுகள் கூடுதலாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, மெக்சிகோ நாட்டின் தலைநகரமான மெக்சிகோ சிட்டியில், ஒரு கட்டடத்தை புனரமைக்கும்போது இந்த கோபுரம்  கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மண்டை ஓடுகள், ஆஸ்டெக் இன மக்களின் கதிர், போர் மற்றும் நரபலிக்கான ஆஸ்டெக் கடவுளின் கோயிலில் இருக்கும் மண்டை ஓடு அடுக்கைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Also Read  உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

ஹுட்சிலோபோச்ட்லி தேவாலயத்தின் ஒரு மூலையில், ஹுவே சொம்பாண்ட்லி என்கிற இந்த மனித மண்டை ஓடு அடுக்கு காணப்படுகிறது.

இந்த ஆஸ்டெக் இன மக்கள் நவ்ஹாத்ல் எனும் மொழியைப் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் 14-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை, இன்றைய மத்திய மெக்சிகோவை ஆண்டு வந்தார்கள் எனவும்  தற்கால மெக்சிகோ சிட்டி உள்ள இடத்தில் அமைந்திருந்த, டெனோஷ்டிட்லன் இவர்களின் தலை நகரமாக இருந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

எங்கள் நாட்டில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாதமான விஷயங்களில் ஹுவே சொம்பாண்ட்லியும் ஒன்று என எந்த வித சந்தேகமுமின்றிக் கூறலாம் என்கிறார் மெக்சிகோவின் கலாசார அமைச்சர் அலெஜாண்ட்ரா ஃப்ராஸ்டோ.

இந்த கோபுரத்தை 1486-ம் ஆண்டு முதல் 1502-ம் ஆண்டு வரையான கால கட்டத்தில், மூன்று கட்டமாக கட்டமைத்து இருக்கிறார்கள் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

Also Read  மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்... 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

இந்த கோபுரத்தில், இளம் வயது போர் வீரர்களின் மண்டை ஓடுகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் மண்டை ஓடுகளும் கிடைத்திருப்பது அவர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. 

மேலும் இது ஆஸ்டெக் பேரரசில் மனித உயிர்களை பலிகொடுப்பது அல்லது தியாகம் செய்வது தொடர்பான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  அமெரிக்க ஆயுதங்களுடன் நவீன உடைகளில் தாலிபான் ராணுவம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

“இந்த மண்டை ஓட்டுக் கோபுரத்தில் இருக்கும் மண்டை ஓடுகளில், எத்தனை மண்டை ஓடுகள் போர் வீரர்களுடையவை என குறிப்பிட்டுக் கூற முடியாது, இதில் சிலர் கைது செய்யப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதே நேரத்தில் இந்த மண்டை ஓடுகள் அனைத்துமே உயிர் பலி கொடுக்கப்பட்டவை தானா என்பதும் நமக்குத் தெரியாது” என அகழ்வாராய்ச்சியாளரான ரால் பரேரா கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

“2022ம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” -பில் கேட்ஸ் தகவல்!

Shanmugapriya

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

துனீசியா: பிரதமரின் பதவியை பறித்த அதிபர்! காரணம் இதுதான்..!

suma lekha

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார நிறுவனம்

Shanmugapriya

அடர் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி… துர்நாற்றத்தால் மக்கள் அவதி… வெளியான ‘பகீர்’ உண்மை!

Lekha Shree

காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு… தாலிபான்கள் கண்டனம்..!

suma lekha

விஸ்வரூபம் எடுக்கும் நைஜீரியா மாணவிகள் கடத்தல் விவகாரம்! உடனடியாக விடுவிக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்!

Lekha Shree

இன்று உங்கள் நிழலை நீங்களே பார்க்க முடியாது… இதுதான் காரணம்..!

suma lekha