“கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என கூறி தப்பித்துக்கொள்வேன்!” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதுகுறித்து முதலமைச்சர் நிச்சயமாக கேள்வி கேட்பார். அப்படி கேட்டால் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என சொல்லி நான் தப்பித்துக் கொள்வேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

Also Read  முழு ஊரடங்கு எதிரொலி - ரூ. 218 கோடிக்கு விற்பனையான மதுபானங்கள்…!

இக்கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை கொறடா கோவி. செழியன், “விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை திமுக மாநாடு போன்று நடத்தியுள்ளனர்” என கூறினார்.

அதையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “திமுக அரசு கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில், நான் இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றது குறித்து தமிழக முதல்வர் நிச்சயமாக கேள்வி கேட்பார்.

Also Read  தமிழக அரசின் பெரியார் விருது, அம்பேத்கர் விருது அறிவிப்பு!

தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கி உள்ளதால் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இதை விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாக கூறி தமிழக முதல்வரிடம் நான் தப்பித்துக் கொள்வேன்.

ஆனால் இந்த கூட்டம் மாநாடு போன்று நடப்பதாக கூறிய தலைமை கொறடா தான் தமிழக முதல்வருக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என நகைச்சுவையாக பேசி சமாளித்தார்.

Also Read  சூர்யாவிடம் நஷ்டஈடு கேட்ட விவகாரம்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #பணம்பறிக்கும்_பாமக ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil

கொரோனா தடுப்பு பரிசோதனையில் பங்கு பெற விருப்பமா?

Tamil Mint

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

தமிழகம்: வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

கோடநாடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!

suma lekha

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

2000ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு!

suma lekha

ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு

Tamil Mint

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree