திண்டுக்கல் சீனிவாசனும்.. அனிதா ராதாகிருஷ்ணனும்..! ஒத்த செருப்பு! ஒரே அணுகுமுறை! கண்டுகொள்வாரா முதலமைச்சர்?


கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது, தன் காலில் பழங்குடியின சிறுவன் ஒருவரை செருப்பை மாட்டிவிடும்படி சொல்லியது மிகப்பெரிய சர்ச்சையானது.

அதிகாரத்திமிரால் மக்களை அடிமைகள் போல நடத்துவதா? சிறுவனை செருப்பை மாட்டிவிட சொல்லியது சரியா? என்று பலரும் கொதித்தனர்.

அதற்கு விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன் என் பேரன் போல நினைத்து தான் அந்த சிறுவனிடம் செருப்பை மாட்டிவிட சொன்னேன் என்று சொல்லி நழுவினார்.

அதோடு சிறுவனை நேரில் அழைத்தும் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவரை கிழி கிழியென கிழித்தெடுத்தனர் நெட்டிசன்கள்.

இந்த சம்பவத்திற்கு சற்றும் சளைக்காத சம்பவம் தான் இப்போது திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது.

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட போது, படகில் இருந்து கரைக்கு மீனவர் ஒருவர் இடுப்பில் அவரை சுமந்தபடி கொண்டு வந்துள்ளார்.

Also Read  பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் - மத்திய அரசு

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையாகியுள்ளது.

பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் ஏரிப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.

ஆய்வு முடிந்து திரும்பும் போது அவருடன் பொன்னேரி, கும்முடிப்பூண்டு எம்.எல்.ஏக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் படகில் இருந்து தண்ணீரில் கால் வைத்து நடந்து கரைக்கு வந்தனர். ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் தண்ணீரில் கால் வைக்காமல் சற்று தயங்கியுள்ளார்.

Also Read  கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! - நடந்தது என்ன?

அவர் வெள்ளை நிற ஷூவை அணிந்திருதார். உடனே அங்கிருந்த மீனவர் ஒருவர் அவரை தனது இடுப்பில் வைத்து தூக்கி கரைக்கு கொண்டுவந்தார்.

இதனை அங்கிருந்த செய்தியாளர்கள் வீடியோ எடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சையானதும் அதற்கு விளக்கமளித்த அமைச்சர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி தூக்கிச் செல்ல சொல்லவில்லை.

அன்பால் அவர்களே என்னை சுமந்து சென்றார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் வழியில் சமூகநீதியை பின்பற்றிய கலைஞர் கருணாநிதியின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இப்படி செய்தது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read  புதிய மத்திய அமைச்சரவையில் உ.பி.க்கு முக்கியத்துவம்...!

தமிழக முதலமைச்சர் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் கொரோனா வார்ட்டுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து துரிதமாக செயல்பட்ட சம்பவம் மக்களிடையே பாராட்டை பெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஒன்றிய அரசை விமர்சித்து மக்களுக்கு எதிரான திட்டங்களுக்காக குரல் கொடுத்து வரும் அதே வேளையில், அமைச்சர் ஒருவர் செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

ஒத்த செருப்புக்கு கொடுக்கும் மரியாதையை மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை அமைச்சர் அறிந்து கொள்வாரா?


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

Tamil Mint

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Mint

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

மருத்துவமனையாக மாறுகிறது ‘லீ மெரீடியன்’ நட்சத்திர ஓட்டல்…!

Lekha Shree

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

காவலர்கள் உயிர்களைப் பற்றிக் கவலை இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

“பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டால் போட்டுக்கொள்ளுங்கள்” – நிர்மலா சீதாராமன்

Shanmugapriya