முல்லை பெரியாறு அணை விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!


முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

இன்று முல்லை பெரியாறு அணை உச்சநீதிமன்றம் உத்தரவிட கொள்ளளவை எட்டாத நிலையில், தமிழக அரசின் அனுமதியின்றி அணை திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் பிரமுகர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனால், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். அதில், “தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மழை அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, வைகை அணைக்கு எடுத்து செல்லும் நீர் மற்றும் பருவநிலை மழை அளவுகளைக் கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 142 அடி வரை தேக்கி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read  டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

நீர்மட்டத்தை கணக்கில் கொண்டு கடந்த 28 தேதி காலை அணையின் இரண்டு மதகுகளை திறக்க மதுரை மண்டலம் நீர்வளத்துறை முடிவு எடுத்து தமிழக நீர்வளத்துறை பொறியாளர்களால் திறக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறந்தபோது கேரள நீர்வளத்துறை அமைச்சரும் சில அதிகாரிகளும் உடன் இருந்து பார்வையிட்டனர்.

Also Read  வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு - தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கேரள அரசு அதிகாரிகள்தான் மதகுகளை திறந்தார்கள் என்பது தவறானது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.85 அடியாக உள்ளது.

நீர்வரத்து வினாடிக்கு 3,404 கன அடியாகவும் குகைப்பாதை வழியாக வைகை அணைக்கு எடுத்துச் செல்லும் நீர் வினாடிக்கு 2,340 கன அடியாகவும் வெளியேற்றப்படும் நீர் வினாடிக்கு 875 கன அடியாகவும் உள்ளது.

Also Read  "அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை" - கமல்ஹாசன் காட்டம்!

நவம்பர் 30-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவிற்கு அணையில் நீர்வரத்து பொறுத்து நீர் தேக்கி வைக்கப்படும். தமிழக அரசு முல்லை பெரியாறு அணையை கண்காணித்தும் பராமரித்தும் வருகிறது” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!

Shanmugapriya

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ் !

suma lekha

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

Shanmugapriya

தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

Lekha Shree

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

sathya suganthi

பாலியல் வழக்கு – சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Lekha Shree

கேரளாவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்துக் கொண்ட மாவட்டம் இதுதான்.!

suma lekha

விஜயகாந்தை நாளை சந்திக்க உள்ளார் டிடிவி தினகரன்! – அரசியல் களத்தின் ஹாட் டாக்!

Shanmugapriya

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

தமிழகம்: புதிய ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

“DOUBLE MUTANT” கொரோனா என்றால் என்ன?

Devaraj