a

“கருத்துக் கணிப்புகள் எல்லாம் எப்போதுமே கருத்து திணிப்புகள் தான்” – அமைச்சர் ஜெயக்குமார்


கருத்துக்கணிப்புகள் எல்லாமே எப்போதுமே கருத்து திணிப்புகள் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியானது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியானது.

Also Read  அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்... வைரல் வீடியோ!

திமுக கூட்டணி 170 லிருந்து 175 இடங்கள் வரை வெற்றிபெறும் எனவும் அதிமுக கூட்டணி 90லிருந்து 95 இடங்கள் வரை வெற்றிபெறும் எனவும் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று கருத்து கணிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Also Read  "தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்" - ஜே.பி.நட்டா

அப்போது பேசிய அவர் கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்து திணிப்புகள் தான் என்று விமர்சித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிட்டு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

கல்லூரி மாணவிகளுக்கு அய்கிடோ பயிற்சி அளித்த ராகுல்காந்தி!

Shanmugapriya

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி!

Shanmugapriya

“அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Lekha Shree

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் கையெழுத்து – 5 முக்கிய அறிவிப்புகள்…முழு விவரம்

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! – எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

Bhuvaneshwari Velmurugan

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு

Tamil Mint

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

கடல் தாண்டி காரியம் சாதித்த வைகோ; பஹ்ரைனில் JEE தேர்வு மையம் அமைப்பு

Jaya Thilagan

தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்த்! – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Tamil Mint

“2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நிராக்கரிக்கப்படும் கட்சியாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint