தடுப்பூசிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!


தடுப்பூசிகள் விவரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டுமே குழுவில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கொரோனா மற்றும் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

Also Read  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

இந்த நிலையில், தடுப்பூசிகள் விவரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் பெறுவதற்காக நாளை மறுநாள் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன்” என கூறியுள்ளார்.

Also Read  எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint

முழு ஊரடங்கான இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2000 விநியோகம் உண்டா?

sathya suganthi

புதுச்சேரியில் இன்று நோ சரக்கு டே

Tamil Mint

குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

Tamil Mint

வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு என தகவல்

Tamil Mint

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

Devaraj

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

sathya suganthi

சசிகலாவின் காரில் அதிமுக கொடி! அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Tamil Mint