தேதி குறித்து கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்தால் கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்


சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 5,415 ஆக குறைந்தாலும் பரிசோதனையின் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம் என்றார்.

மேற்கு மாவட்டங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடைபெற்றது என்றும் அதில், சுகப்பிரசவத்திற்கு ஏற்ப மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுபயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 லட்சம் பிரசவங்கள் நடக்கிறது என்றும் இதில் 61 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்றும் கூறிய அவர், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர் என்றும் இது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து என்றும் குறிப்பிட்டார்.

Also Read  கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?

அவ்வாறான சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் எச்சரித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் – தமிழக அரசு

Tamil Mint

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் கோலாகலம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்

Tamil Mint

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree