சேகர் பாபு மகளின் காதலன் வெளியிட்ட வீடியோ! காதலுக்கு எதிர்ப்பு? காதலன் மேல் பல வழக்குகள்?


இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளை தான் காதலிப்பதால் தன்னை சேகர்பாபு கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் சேகர்பாபு .

இவர் சமீபத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதன்மூலம் பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்றார்.

இதனையடுத்து தற்போது அவர் மேல் இளைஞர் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Also Read  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

அமைச்சர் சேகர் பாபுவின் மகளை தான் காதலிப்பதாகவும் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பிரச்சினை செய்வதாகவும் இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த இளைஞன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் தனது பெயர் சதீஷ்குமார் என்றும் தானும் சேகர் பாபுவின் மகளும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இதனை அறிந்து கொண்ட சேகர்பாபு தொடர்ந்து தங்களை மிரட்டி வருவதாகவும் அப்படி சொல் பேச்சை கேட்கவில்லை என்றால் பொய் வழக்குப் போட்டு சிறையில் குண்டர் சட்டத்தில் அடைத்து விடுவேன் என்றும் மிரட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  திமுக சார்பில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு! எந்த தொகுதியில் தெரியுமா?

அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ வெளியானதை அடுத்து பலரும் சேகர்பாபு எதிராக தங்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டுவந்த சேகர்பாபு தன் மகளின் காதலுக்கு சாதியை பார்த்து ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறாரா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது .

Also Read  அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர்…!

இதற்கு நடுவே சதீஷ்குமார் தானும் சேகர் பாபுவின் மகளும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதோடு அவர்கள் காதலிப்பதை உறுதி செய்யும் வகையில் பல புகைப்படங்களையும் வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்ஸ்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அமைச்சர் சேகர்பாபு தனது மகளுக்கு சதீஷ்குமாரை திருமணம் செய்து வைக்க மறுப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர் .

சதீஷ்குமார் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது . இரண்டு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு அதிகமாகும் கெடுபுடிகள்…விளக்கம் கேட்க தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

Tamil Mint

சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்…!

sathya suganthi

ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் – அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

sathya suganthi

“கமலுக்காக விட்டுக்கொடுத்தேன்” – வேட்புமனு தாக்கல் செய்த பின் மன்சூர் அலிகான் பேட்டி!

Lekha Shree

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint

ஜெர்மனி: முடிவுக்கு வரும் 16 ஆண்டுகால ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி…!

Lekha Shree

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…! வலுக்கும் கண்டனம்..!

Lekha Shree

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Lekha Shree

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj